Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
1700 ரூபா சம்பளத்தை வழங்க 9 நிறுவனங்கள் இணக்கம்!

1700 ரூபா சம்பளத்தை வழங்க 9 நிறுவனங்கள் இணக்கம்!

2 years ago
in செய்திகள்

அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் நேற்று (10) புதன்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் 1700 ரூபா சம்பளத்தை வழங்க 9 நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக இ.தொ.கா.பொதுச் செயலரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தான் முகநூலில் அரசியல் செய்யும் வாய்ச் சொல் வீரரல்ல செயல் வீரன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

இன்று (நேற்று ) மதியம் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் சந்திப்பு நடந்தது. செவ்வாய்க்கிழமை நான் இந்த சபையில், ஆர்ப்பாட்டங்களின் பின்னர் 1700 ரூபா சம்பளம் வழங்க 7 நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக கூறியிருந்தேன். இன்று 9 நிறுவனங்கள் 1700 ரூபா சம்பளம் வழங்க தமது இணக்கத்தை தெரிவித்துள்ளன என்பதை இந்த சபையில் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன். இதேபோன்று கூடிய விரைவில் ஒரு தீர்வுவரும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

நான் சபையில் இல்லாத நேரம் என் மீது சில குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என் மீது 1700 ரூபாவுக்கு நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்த பின்னர் நான் பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தில் இருக்கும் துரைமார்கள் அனைவரையும் என் வீட்டுக்கு அழைத்து நான் பேசியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கருத்தாகும்.பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தில் இருக்கும் துரைமார்களையும் கூப்பிட்டேன்.ஹட்டன்,தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனங்களில் இருக்கும் துரைமார்களையும் நான் கூப்பிட்டேன்.ஏன் கூப்பிட்டேன் என்றால் நாம் தான் மக்களுடன் வேலை செய்து கொண்டிருக்கின்றோம்.நாம் பேஸ்புக் அறிக்கை விடுபவர்கள் அல்ல. நான் ஒளிவு மறைவாக பேசுபவன் அல்ல. நான் ஜீவன் தொண்டமான். நான் போய் துரைமாரை பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது .அவர்கள் தான் என்னை வந்து பார்க்க வேண்டும்.

சில முகாமையாளர்கள் எப்படி மக்களை துன்புறுத்துகின்றார்கள் என நான் இங்கு சொல்லியிருந்தேன். அதுக்கு இங்கு அந்த எம்.பி. புசல்லாவையில் ஒரு இளைஞர் இறந்தபோது அங்குள்ள பொலிஸை நாம் மாற்றியதாக சொல்லியுள்ளார். படித்த முட்டாளுக்கு இந்த எம்.பி. தான் சிறந்த உதாரணம். பொலிஸ் அரச கட்டுப்பாட்டில் உள்ள நபர் .முகாமையாளர் தனியார் நிறுவனத்துக்குள் வரும் நபர். நான் எம்.பி.யாக இருக்கும்போதும் தட்டிக்கேட்டேன், இராஜாங்க அமைச்சராக இருக்கும் போதும் தட்டிக்கேட்டேன்,அமைச்சராக இருக்கும் போதும் தட்டிக்கேட்டேன் பேஸ்புக் வாய் சொல் வீரராக இருக்கும் நபர் நானல்ல. அதனால்தான் மக்கள் ஆதரவு இ.தொ.கா பக்கமுள்ளது

இந்த சம்பள பிரச்சினையை முடிக்கவே நாம் விரும்புகின்றோம். அரசியல் செய்ய விரும்பும் கீழ்த்தரமான சிந்தனை எம்மிடம் கிடையாது. தமது பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசவே மக்கள் எமக்கு வாக்களித்து அனுப்பியுள்ளார்கள். என்னை விமர்சிக்கும் இவர்கள் போன்றவர்கள் முடிந்தால் நேருக்கு நேர் வந்து என்னுடன் பேசட்டும். சபையின் பாதுகாப்புக்கு பின்னால் இருந்து ஏன் பேசுகின்றார்.

நான் மீண்டும் கூறுகின்றேன் இந்த பிரச்சினையை தீர்க்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

October 1, 2026
டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
செய்திகள்

டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

October 1, 2026
நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!

October 1, 2026
ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை
செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

October 1, 2026
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு
செய்திகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு

October 1, 2026
கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
Next Post
விமான நிலையமிருந்து யாழ் நோக்கி பயணித்த வான் விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

விமான நிலையமிருந்து யாழ் நோக்கி பயணித்த வான் விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.