Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாசிக்குடா முனைமுருகன் கோவில் வீதி திறப்புவிழா!

பாசிக்குடா முனைமுருகன் கோவில் வீதி திறப்புவிழா!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பொருளாதார முக்கியத்துவம் மிக்க பாசிக்குடா முனைமுருகன் கோவில் வீதியானது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர்களினால் வைபவ ரீதியாக சனிக்கிழமையன்று (13) காலை திறந்து வைக்கப்பட்டது.

இவ் வீதியானது 1.54 கிலோமீற்றர் தூரமுடைய பிரதான வீதியாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள வீதிகள் அபிவிருத்தி உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் பங்கு பற்றும் முகமாக வருகை தந்துள்ள அமைச்சர் நிகழ்வில் முதன் நிகழ்வாக இவ் வீதியினை திறந்து மக்கள் பாவனைக்கு கையளித்தார்.

அமைச்சர் வீதியினை திறந்து வைத்ததுடன் அவ் வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான முணைமுருகன் ஆலயத்திற்கு சென்று முருகனை தரிசித்ததுடன், நினைவாக மரக் கன்றுகள் நடுகை செய்து கொண்டு மக்கள் சந்திப்பினையும் மேற்கொண்டிருந்தார்.

குறித்த வீதியானது கடந்த 30 வருடகால யுத்தத்தினால் மக்கள் பாவனைக்கு பயன்படாத நிலை காணப்பட்டது. வீதியின் அருகாமையில் கல்குடா இராணுவ முகாம் அமைந்துள்ளதால் பாதுகாப்பு நிலவரம் காரணமாக இராணுவத்தினர் போக்குவரத்து தடை ஏற்படுத்தியிருந்தனர்.

இவ் வீதியால் போக்குவரத்தினை மேற் கொள்ளும் முகமாக வசதிகளை ஏற்படுத்தி தருமாறு பிரதேச மக்கள் பல முறை அரசியல் உயர் மட்ட ரீதியில் முயற்சி மேற்கொண்ட போதிலும் பலனின்றி போனது.
அத்துடன் வீதியானது நீண்ட காலமாக புணர்தாரணம் செய்யப்படாமல் குன்றும், குழியுமாக காணப்பட்டதுடன் வெள்ளகாலங்களில் நீர் தேங்கி வழிந்தோட முடியாமல் முற்றிலும் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத நிலையில் சேறும் சகதியுமாய் காணப்பட்டது.

இவ் வீதியின் வழியே ஆலயத்திற்கு வழிபடச் செல்வோர், மீன் பிடித் தொழிலுக்கு செல்வோர் மற்றும் சுற்றுலா பயணிகள் என பலரும் தங்களது போக்குவரத்தினை மேற்கொள்வதில் பல்வேறு பட்ட அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர்.

இதனை நிவர்த்தி செய்யும் முகமாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எடுத்த துரித முயற்சியினால் இவ் வீதி புணருத்தாரணம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு ஏற்ற வசதிகளுடன் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது பிரதேச மக்கள் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர்கள் இருவருக்கும் தங்கள நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு
செய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு

September 30, 2026
பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

September 30, 2026
தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!
செய்திகள்

தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!

September 30, 2026
பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!
செய்திகள்

பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!

September 30, 2026
டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!
செய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!

September 30, 2026
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

September 30, 2026
Next Post
அகில இலங்கை தடகளப் போட்டியில் முல்லைத்தீவு மாணவன் சாதனை!

அகில இலங்கை தடகளப் போட்டியில் முல்லைத்தீவு மாணவன் சாதனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.