Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வைத்தியர் என அடையாளப்படுத்தி சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ மாணவி கைது!

வைத்தியர் என அடையாளப்படுத்தி சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ மாணவி கைது!

2 years ago
in செய்திகள்

வைத்திய பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பே பயிற்சி பெற்ற வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி தனியார் மருத்துவமனை ஒன்றில் 6 மற்றும் 8 வயதுடைய சட்டத்தரணி தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கு வைத்திய சிகிச்சை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவியை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல நேற்று (15) பிற்பகல் உத்தரவிட்டார்.

கடந்த 3ஆம் திகதி கொலன்னாவை பிரதேசத்தில் உள்ள வைத்திய நிலையமொன்றுக்கு வருகை தந்த சட்டத்தரணி ஹுசைன் அஸார் சைதுன் மற்றும் சட்டத்தரணி பாத்திமா ஜுதைன் ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுக்கும் வைத்திய சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தனர்.

மேற்படி வைத்திய சிகிச்சையின் பின்னர் அவர்களின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, சந்தேகநபரான வைத்தியருக்கு இதுபற்றி அறிவிக்கப்பட்டு, மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேற்படி மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ முத்திரையில் மற்றொரு வைத்தியரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் இது தொடர்பில் வினவிய போது, ​​எவருக்கும் வைத்தியச் சிகிச்சை வழங்குவதற்குத் தான் தகுதி பெற்றுள்ளதாக சந்தேகநபரான பெண் தெரிவித்துள்ள நிலையில், அதன் பிரகாரம் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் படி, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான சந்தேக நபர் அல்லது மேற்படி தகவல் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாமை தொடர்பில் சட்டத்தரணி தம்பதியினரும் ஏனைய சட்டத்தரணிகள் குழுவொன்றும் மேலதிக நீதவானிடம் தெரிவித்திருந்தனர்.

இதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை அழைத்த மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல, சந்தேகத்திற்குரிய மருத்துவ மாணவி செய்தது கொலை முயற்சிக்கு சமமான குற்றம் என குறிப்பிட்டு அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

உரிய அனுமதி இன்றி மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அஜ்ரா நியாஸ் என்ற சந்தேக நபரான பெண் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

தொடர்புடையசெய்திகள்

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!
செய்திகள்

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!

August 21, 2026
அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விபத்து; 8 பேரும் உயிரிழப்பு!
உலக செய்திகள்

அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விபத்து; 8 பேரும் உயிரிழப்பு!

August 21, 2026
யாழில் ஆலய திருவிழாவில் வாணவேடிக்கை, லேசர் ஒளியால் 166 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

யாழில் ஆலய திருவிழாவில் வாணவேடிக்கை, லேசர் ஒளியால் 166 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

August 21, 2026
வடக்கு, கிழக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு
செய்திகள்

வடக்கு, கிழக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

August 21, 2026
வாகரை, வாழைச்சேனை, காயான்கேணி பகுதிகளில் காணிகளை சூறையாடியுள்ள ஹிஸ்புல்லா!
காணொளிகள்

வாகரை, வாழைச்சேனை, காயான்கேணி பகுதிகளில் காணிகளை சூறையாடியுள்ள ஹிஸ்புல்லா!

August 21, 2026
“இதுவே எனது கடைசி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்”; எம்.பி. அர்ச்சுனா!
செய்திகள்

“இதுவே எனது கடைசி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்”; எம்.பி. அர்ச்சுனா!

August 21, 2026
Next Post
கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய நுழைவாயில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனினால் திறந்து வைப்பு!

கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய நுழைவாயில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனினால் திறந்து வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு