Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று ஆடிப்பிறப்பு!

இன்று ஆடிப்பிறப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இன்றையதினம் 17 ஆம் திகதி ஆடிப்பிறப்பு தினமாகும் .தட்சணாயணத்தின்‌ தொடக்க தினம்‌ ஆடிமாத முதலாம்‌ நாள்‌ ஆகும்‌, இதனை ஆடிப்பிறப்பு என சைவத்‌ தமிழ்‌ மக்கள்‌ கொண்டாடிவருகின்றனர்‌, ஆடிமாத முதலாம்‌ நாள்‌ கொண்டாடப்படும்‌ பண்டிகை என்பதால்‌ இதனை ஆடிப்பிறப்பு என அழைத்துக்கொள்கின்றனர்‌.

அத்துடன் ஆடிப்பிறப்பு என்றதுமே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் நவாலியூர் சோமசுந்த புலவரும் அவர் பாடிய ப்பாடலும் தாம்.

அந்தவகையில், ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே … கூடிப்பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுகட்டை தின்னலாம் தோழர்களே… இது யாழ்ப்பாணம் நவாலியூர் சோமசுந்த புலவர் ஆடிப்பிறப்பு பற்றி பாடிவைத்துள்ளார்.

இந்த நாளில் வீடுகளில் கொழுகட்டை , ஆடிக்கூழ் என்பன சமைத்து உறவுகளுடன் உண்டு மகிழ்வார்கள்.

பனங்கட்டி, தேங்காய் துண்டுகள் கலந்த மாவின் சுவை சொட்டும் கூழ், சர்க்கரையின் (வெல்லம்) தித்திப்புடன் கொழுக்கட்டை இவையிரண்டும் ஈழத்தமிழர்களின் (சைவமக்களின்) வீடுகளில் ஆடிப்பிறப்பன்று தவறாது இடம்பிடிக்கும் உணவுகள் ஆகும்.

முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றார்கள் – இந்து சமயத்தில் இந்த நாள் தேவர்களுடன் தொடர்புபடுத்தி வழிபடப்படுகின்றது.

அதாவது தட்சணாயண காலத்தின் தொடக்க தினம் (இன்று) ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலத்தில் கோடைகால வெப்பம், காண்டாவனம் உட்பட, வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் வளர்கின்றது.

இக் காலத்திலேயே விதை விதைத்தல், மரங்கள் நடுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. ஆடி மாதத்தை பொறுத்தவரை மாதப்பிறப்பு துவங்கி அனைத்து நாட்களுமே முக்கியமான நாட்கள் தான்.

திதி, கிழமை, நட்சத்திரம் என அனைத்தும் சிறப்பு பெறுவது ஆடி மாதத்தில் தான். ஆடி மாதத்தில் ஆடி மாத பிறப்பு, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடிப் பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடி 18, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடி பெளர்ணமி என அனைத்தும் சிறப்புக்குரிய நாட்களாகும்.

2024 ஆடி மாதமுக்கிய நாட்கள்

ஆடித்தபசு, ஆடிப்பெளர்ணமி – ஜூலை 21 – ஆடி 05 (ஞாயிறு)

ஆடிக்கிருத்திகை – ஜூலை 29 – ஆடி 13 (திங்கள்)

ஆடிப்பெருக்கு – ஆகஸ்ட் 03 – ஆடி 18 (சனி)

ஆடி அமாவாசை – ஆகஸ்ட் 04 – ஆடி 19 (ஞாயிறு)

ஆடிப்பூரம் – ஆகஸ்ட் 07 – ஆடி 22 (புதன்)

நாக சதுர்த்தி – ஆகஸ்ட் 08 – ஆடி 23 (வியாழன்)

கருட பஞ்சமி, நாக பஞ்சமி – ஆகஸ்ட் 09 – ஆடி 24 (வெள்ளி)

வரலட்சுமி விரதம் – ஆகஸ்ட் 16 – ஆடி 31 (வெள்ளி)

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
கனடாவில் மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் நிர்வாணமாக புகுந்த நபர் கைது!

கனடாவில் மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் நிர்வாணமாக புகுந்த நபர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.