Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 77 ஆவது சிரார்த்த தினம்!

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 77 ஆவது சிரார்த்த தினம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 77 ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள் இன்று (19) மட்டக்களப்பில் பல்வேறு இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கல்லடி – உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் சமாதியில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவி மேலாளர் சுவாமி சுரஷ்சிதானந்தா ஜீ மஹராச், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை தலைவர் க.பாஸ்கரன், செயலாளர் ச.ஜெயராஜா மற்றும் சிவானந்தா வித்தியாலய ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

அடிகளாரது சமாதிக்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து ”வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ” பாடல் இசைக்கப்பட்டு சிரார்த்த தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு திருநீற்றுப் பூங்காவில் அமைந்துள்ள சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலையின் மாணவிகளால் சுவாமி விபுலானந்தரின் ”வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ” எனும் பாடலும் இசைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அத்தோடு சுவாமியின் சிரார்த்த தின நிகழ்வுகள் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக வளாகத்திலும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

இதன்போது சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவ வளாகத்தில் அமையப்பெற்றுள்ள சுவாமியின் திருவுருவச்சிலைக்கு நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி திருமதி.பாரதி கெனடி தலைமையில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, சிரார்த்த தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டது.

அத்தோடு சிவானந்தா தேசிய பாடசாலையின் ஸ்தாபகராக சுவாமி விபுலானந்தர் திகழ்ந்ததால் இன்றைய தினம் பாடசாலையில் இடம் பெற்ற ஸ்தாபகர் தின விழாவிலும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிரார்த்த தினம் அனுஷ்டிக்கப்பட்டதுடன், சுவாமியின் திருவுருவ படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அயகமவில் 300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு!
செய்திகள்

அயகமவில் 300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு!

August 16, 2026
சவுதி வீட்டுவேலைக்குச் சென்று கொடுமைகளை அனுபவிக்கும் மட்டக்களப்பு பெண் – காப்பாற்றுமாறு உருக்கமான கோரிக்கை!
காணொளிகள்

சவுதி வீட்டுவேலைக்குச் சென்று கொடுமைகளை அனுபவிக்கும் மட்டக்களப்பு பெண் – காப்பாற்றுமாறு உருக்கமான கோரிக்கை!

August 16, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்கும் முயற்சி – ரவூப் ஹக்கீம்
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்கும் முயற்சி – ரவூப் ஹக்கீம்

August 16, 2026
வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!
செய்திகள்

வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!

August 16, 2026
பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!
செய்திகள்

பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!

August 16, 2026
நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

August 16, 2026
Next Post
நெடுந்தீவு நடுக் கடலில் பிறந்த குழந்தை!

நெடுந்தீவு நடுக் கடலில் பிறந்த குழந்தை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.