திருமலை தம்பலகாமம் – கூட்டாம்புளி பகுதியில் நேற்று (20) மாலை எரிந்த நிலையில் ஆணின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக விவசாயிகளினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலத்துக்கு அருகே அடையாள அட்டை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் உயிரிழந்த நபர் தம்பலகாமத்தைச் சேர்ந்த அன்புவழிபுரத்தில் திருமணம் முடித்து சமீப காலமாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தவர் எனவும், திருமண நிகழ்வொன்றுக்காக சில நாட்களுக்கு முன்னர் நாட்டுக்கு வந்திருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்த சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் தம்பலகாமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.