Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஸ்வெசும பெரும் செல்வந்தர்கள்?; வங்கிக் கணக்கு விபரங்களை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டது!

அஸ்வெசும பெரும் செல்வந்தர்கள்?; வங்கிக் கணக்கு விபரங்களை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டது!

15 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அஸ்வெசும நலன்புரி உதவித்திட்டத்தின் கீழ் நிதியுதவிகளைப் பெறும் பயனாளிகள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தங்களது பெயரில் உள்ள நிதி தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தும் பிரமாணப் பத்திரத்தை (Affidavit) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, சில பயனாளிகள் தங்களது நிதிச் சொத்துக்கள் தொடர்பான விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தற்போதைய பயனாளிகள், புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் அஸ்வெசும தொடர்பில் மேன்முறையீடு செய்தவர்கள் என அனைவரும் குறித்த பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் வட்டிக்குக் கடன் வழங்குதல் போன்ற வெளிப்படுத்தப்படாத வருமான வழிகள் மூலம் பணம் ஈட்டி, அவற்றை மறைப்பதற்காக வங்கிக் கணக்குகளைப் பராமரிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மறைக்கப்பட்ட நிதி தொடர்பில் ஆட்சேபனைகள் அல்லது தகவல்கள் வெளிவரும் சந்தர்ப்பங்களில், விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளை கணினி முறைமையின் ஊடாகச் சரிபார்ப்பதற்கு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் வகையிலான சம்மதத்தையும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நலன்புரி நிதியுதவிகள் உண்மையில் உதவி தேவைப்படும் மக்களுக்கு நியாயமான முறையில் சென்றடைவதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மோசடி விசாரணைகளுக்காக இலங்கைக்கு வந்துள்ள FBI
செய்திகள்

மோசடி விசாரணைகளுக்காக இலங்கைக்கு வந்துள்ள FBI

November 20, 2026
திருமண வயதை 16 ஆகக் குறைக்க வேண்டும்; விருப்பத் தெரிவாக மாற்றவும் கோரிக்கை – உலமா கட்சி!
செய்திகள்

திருமண வயதை 16 ஆகக் குறைக்க வேண்டும்; விருப்பத் தெரிவாக மாற்றவும் கோரிக்கை – உலமா கட்சி!

November 20, 2026
யுத்தத்தால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னமும் மீள்குடியேறவில்லை; ஜனாதிபதி தெரிவிப்பு
செய்திகள்

யுத்தத்தால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னமும் மீள்குடியேறவில்லை; ஜனாதிபதி தெரிவிப்பு

November 20, 2026
யாழில் தடைசெய்யப்பட்ட 274 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

யாழில் தடைசெய்யப்பட்ட 274 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது!

November 20, 2026
மாத்தளை பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு!
செய்திகள்

மாத்தளை பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு!

November 20, 2026
மத்திய காசாவில் இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு!
செய்திகள்

மத்திய காசாவில் இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு!

November 20, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு