Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மோசடி விசாரணைகளுக்காக இலங்கைக்கு வந்துள்ள FBI

மோசடி விசாரணைகளுக்காக இலங்கைக்கு வந்துள்ள FBI

18 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்கப் பிரஜைகளைக் குறிவைத்து சர்வதேச அளவில் மோசடிகளில் ஈடுபடும் வலையமைப்புகள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகம் (FBI) மற்றும் நீதித்திணைக்களத்தின் (DOJ) அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம், இணையவழி மோசடிகள் மற்றும் நாடுகடந்த குற்ற வலையமைப்புகளை ஒழிப்பதற்காக அமெரிக்க மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகும் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது, அமெரிக்க அதிகாரிகள் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCIU), மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB), தொழில்நுட்ப உதவிப் பிரிவு (TAU) உள்ளிட்ட விசேட பிரிவுகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, இலங்கையில் இயங்கிய இரண்டு மோசடி மையங்கள் தொடர்பான விசாரணைகள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், டிஜிட்டல் ஆதாரங்களைப் பெறுவதற்காக 80 இற்கும் மேற்பட்ட இலத்திரனியல் சாதனங்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இலங்கைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களைப் பிரித்தெடுத்தல், விசாரணை உத்திகளை மீளாய்வு செய்தல் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களைக் கையாள்வது தொடர்பான பயிற்சிகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நாடுகடந்த குற்ற வலையமைப்புகள் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்து வருவதாக அமெரிக்கத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த மோசடி வலையமைப்புகளை முறியடிப்பதற்காக, அமெரிக்க மற்றும் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்வதுடன், விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பதுடன், இணையவழி மோசடிகளில் ஈடுபடுவோரைச் சட்டத்தின் முன் நிறுத்துவதே இந்த ஒத்துழைப்பின் பிரதான நோக்கம் என அமெரிக்கத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருமண வயதை 16 ஆகக் குறைக்க வேண்டும்; விருப்பத் தெரிவாக மாற்றவும் கோரிக்கை – உலமா கட்சி!
செய்திகள்

திருமண வயதை 16 ஆகக் குறைக்க வேண்டும்; விருப்பத் தெரிவாக மாற்றவும் கோரிக்கை – உலமா கட்சி!

November 20, 2026
யுத்தத்தால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னமும் மீள்குடியேறவில்லை; ஜனாதிபதி தெரிவிப்பு
செய்திகள்

யுத்தத்தால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னமும் மீள்குடியேறவில்லை; ஜனாதிபதி தெரிவிப்பு

November 20, 2026
யாழில் தடைசெய்யப்பட்ட 274 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

யாழில் தடைசெய்யப்பட்ட 274 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது!

November 20, 2026
மாத்தளை பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு!
செய்திகள்

மாத்தளை பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு!

November 20, 2026
மத்திய காசாவில் இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு!
செய்திகள்

மத்திய காசாவில் இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு!

November 20, 2026
கொலை வழக்கில் 13 ஆண்டுகளின் பின்னர் இருவருக்கு மரண தண்டனை!
செய்திகள்

கொலை வழக்கில் 13 ஆண்டுகளின் பின்னர் இருவருக்கு மரண தண்டனை!

November 20, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.