Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்; ஒப்பந்தம் கைச்சாத்து!

விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்; ஒப்பந்தம் கைச்சாத்து!

2 years ago
in செய்திகள்

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக விவசாய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் கையெழுத்திடப்பட்டது.

முதல் கட்டத்தில், இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பை வழங்கும் இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன், விவசாய, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார். இதன்படி எதிர்காலத்தில் மக்கள் வங்கியுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக முன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்த தெரிவு செய்யப்பட்ட 26 பிரதேச செயலகங்களில் விவசாய நவீனமயமாக்கல் நிலையங்கள் ஊடாக வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த தலா 25 மில்லியன் ரூபா வீதம் 650 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக 10 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய நவீனமயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்த 75 பிரதேச செயலகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சுழற்சி முறைக் கடன் திட்டமாக செயல்படுத்தும் வகையில், அரசு வழங்கிய பங்களிப்பை விவசாய நவீனமயமாக்கல் கடன் திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடனாக, இலங்கை, மக்கள் வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகிய மூன்று அரச வங்கிகளில் இருந்து பயனாளிகள் தேர்ந்தெடுக்கும் வங்கி மூலம் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில், பொறிமுறைமையொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதன்படி, இலங்கை வங்கியின் தலைமையகத்தில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளரின் பெயரில் உள்ள கணக்கில் வைப்பு செய்யப்பட்ட நிதியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகிய மூன்று வங்கிகளில் பயனாளி தேர்ந்தெடுத்த வங்கியின் மூலம் விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு வட்டியில்லாக் கடனாக இந்தப் பணம் வழங்கப்படுகிறது.

கடன் சலுகைக் காலம் அதிகபட்சம் 06 மாதங்கள் ஆகும். மேலும் கடன் சலுகைக் காலம் உட்பட கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய அதிகபட்ச காலம் 05 வருடங்கள் ஆகும். மேலும், விவசாயிகள் அல்லது விவசாய தொழில்முயற்சியாளர்கள் பெற்றுக்கொள்ளும் கடன் தொகை மற்றும் வேலைத் திட்டத்தின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், கடன் சலுகைக் காலம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் ஆகியவை விவசாய நவீனமயமாக்கல் மையங்களால் தீர்மானிக்கப்படுகின்றன.

தொடர்புடையசெய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வித் திட்டம்
செய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வித் திட்டம்

August 22, 2026
காத்தான்குடி ‘பொலிஸ் பாயிஸை’ கைது செய்ய சர்வதேச பிடியாணை நடவடிக்கை!
செய்திகள்

காத்தான்குடி ‘பொலிஸ் பாயிஸை’ கைது செய்ய சர்வதேச பிடியாணை நடவடிக்கை!

August 22, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு!

August 22, 2026
கொழும்பு துறைமுக நகர சம்பவம்; மூன்று சீன சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
செய்திகள்

கொழும்பு துறைமுக நகர சம்பவம்; மூன்று சீன சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்

August 22, 2026
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு; மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்!
செய்திகள்

யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு; மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்!

August 22, 2026
சமிட்புர சதுவின் தகவலுக்கு அமைய மேலும் ஒரு துப்பாக்கி மீட்பு!
செய்திகள்

சமிட்புர சதுவின் தகவலுக்கு அமைய மேலும் ஒரு துப்பாக்கி மீட்பு!

August 22, 2026
Next Post
உலகத் தலைவர்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு; எலான் மஸ்க் பகிர்ந்துள்ள ஏ.ஐ காணொளி!

உலகத் தலைவர்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு; எலான் மஸ்க் பகிர்ந்துள்ள ஏ.ஐ காணொளி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.