யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்றிலிருந்து பேராதனை வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்து மருத்துவர்களது குறைபாடுகள் தொடர்பாகவும், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் வரையிலும் இந்த தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நியமனத்தை அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.