செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 27ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (17) முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 14 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்மூலம் இதுவரை கண்டறியப்பட்ட என்புக்கூடுகளின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளதுடன், அவற்றில் 362 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் குழந்தை மற்றும் சிறுவர் ஒருவருக்குச் சொந்தமானவை உட்பட 5 என்புக்கூடுகள் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டன.
மேலும், அகழ்வுப் பணிகளின் போது என்புக்கூடு ஒன்றின் இடுப்புப் பகுதியில் இரும்பு வளையம் ஒன்று சான்றுப் பொருளாக மீட்கப்பட்டதுடன், சிறுமி ஒருவரின் பிளாஸ்டிக் காப்பை ஒத்த பொருளும் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பொருளை சுத்தப்படுத்தி ஆய்வு செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







