கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தவிசாளராக ஏ.பி. மதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஏ.பி. மதன் தனது கடமைகளைக் திருகோணமலை காரியாலயத்தில் இன்று பொறுப்பேற்றார்.
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தவிசாளராகப் பதவியேற்றுள்ள ஏ.பி. மதன், கொழும்பு ஊடகமொன்றின் முன்னாள் பிரதம ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.