அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு கோரி நேற்று (30) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் புதிய சுதந்திர முன்னணியின் தலைவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க, ஆளும் கட்சியின் எம்.பிக்களுக்கு நேற்று ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவரது ஆதரவை கோரும் கூட்டம் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
பரந்த விளம்பரம் வழங்குவதற்காக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் கலந்துரையாடல் தொடர்பான படங்கள், காணொளி காட்சிகள் மற்றும் உத்தியோகபூர்வ செய்திக்குறிப்பைப் படிவங்கள் வௌயாகியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாகக் கூறும் ரணில் , பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
1981 இன் 15 மற்றும் 2023 ஆம் ஆண்டின் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் எண். 3 ஆகியவை இதன்போது கடைப்பிடிக்கப்படவில்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.