இரண்டு திணைக்களங்களை நிரந்தரமாக மூடுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு வர்த்தக திணைக்களம் மற்றும் தொலைத்தொடர்பு திணைக்களம் இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
பணவியல், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகத்தின் பணிப்பாளர் ஜெனரல் (லிக்விடேட்டர்) பி.எச். ஏ.எஸ்.விஜயரத்னவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, செயற்பாட்டில் குறைந்த மட்டத்தில் உள்ள நாற்பது அரச நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக 430 நிறுவனங்கள் நிதி அமைச்சினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.