Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரிட்டன் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிரிட்டன் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

9 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பிரிட்டனில் நிலவும் அமைதியின்மை நிலவரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னிடம் கேட்டறிந்ததாகவும், பிரிட்டன்வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டதாகவும் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் இலங்கையர் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்களை பிரிட்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் சந்தித்த ரோஹித்த போகொல்லாகம, அவர்களுடன் பிரிட்டனில் நிலவும் அமைதியின்மை நிலவரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது குறிப்பாக ‘பிரிட்டனின் சில பகுதிகளில் மக்கள் அமைதி சீர்குலைவு சம்பவங்கள் பதிவாகியிருக்கும் நிலையில், இதுகுறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்னிடம் கேட்டறிந்ததுடன், இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பில் உறுதிப்பாட்டையும் பெற்றுக்கொண்டார்.

அதன்படி இதுகுறித்து நாம் பிரிட்டன் அதிகாரிகளுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடிவருவதுடன், நாட்டில் மீண்டும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உத்தரவாதமளித்திருக்கிறோம்’ என உயர்ஸ்தானிகர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

அத்தோடு பிரிட்டன்வாழ் இலங்கையர்களை அவதானத்துடன் செயற்படுமாறும், உள்நாட்டு செய்திகள் மற்றும் அரசினால் விடுக்கப்படும் அறிவிப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் பிரிட்டன்வாழ் இலங்கையர்களை அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணுமாறும், அவசர உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் 10447475206220 அல்லது 02072621841 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அல்லது mail@slhc-london.co.uk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ உயர்ஸ்தானிகரகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் ரோஹித்த போகொல்லாகம கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பியுள்ள போராட்டம்; அச்சத்தில் வெளிநாட்டவர்கள்!
Tags: BatticaloaBattinaathamnews

தொடர்புடையசெய்திகள்

ஆயிரக்கணக்கான பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசு கப்பல்
செய்திகள்

ஆயிரக்கணக்கான பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசு கப்பல்

May 13, 2025
கொழும்பில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது
செய்திகள்

கொழும்பில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது

May 13, 2025
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது
செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது

May 13, 2025
கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்
செய்திகள்

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்

May 13, 2025
மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
செய்திகள்

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

May 12, 2025
Next Post
நீக்கப்படுகிறது ஆங்கில பரீட்சை; காரணத்தை வெளியிட்ட கல்வி அமைச்சு!

நீக்கப்படுகிறது ஆங்கில பரீட்சை; காரணத்தை வெளியிட்ட கல்வி அமைச்சு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.