Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரியேந்திரனுக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்; விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

அரியேந்திரனுக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்; விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள்

தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்காமல் இருப்பது மன வருத்தத்துக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் அரியநேத்திரனுக்கு சகல தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று (15) இடம்பெற்ற வேட்புமனு கையளிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேத்திரன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகிறார். ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பில் சிந்திக்காமல் தமிழ் மக்கள் சார்பில் சிந்திக்க வேண்டும்.

இதற்கான கட்டாயம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. கட்சி ரீதியில் முரண்பட்டுக் கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அடையாளமாக பா.அரியேந்திரனை 89 கட்சி தரப்பினர் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

இனி அவரை பற்றியோ, அவரின் கட்சி பற்றியோ பேசுவது அவசியமில்லை. தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் அரியநேத்திரனுக்கு சகல தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்.

தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்காமல் இருப்பது மன வருத்தத்துக்குரியது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள்.வெளிப்படையாக இதனை குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால், ஒரு சிறுபான்மை தரப்பினர் இதனை தடுக்கிறார்கள். ஆகவே, இவர்கள் தமது முரண்பாடுகளை விட்டு விட்டு தமிழ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கைத் தமிழரசு கட்சி உறுதியாக தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!

September 8, 2026
மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!

September 8, 2026
அமெரிக்காவுக்கு எதிராக “பொருளாதாரப் போர்” நடத்த ஈரான் அச்சுறுத்தல்!
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிராக “பொருளாதாரப் போர்” நடத்த ஈரான் அச்சுறுத்தல்!

September 8, 2026
2018இல் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கொலை வழக்கு; மனைவியைக் கைது செய்த சி.ஐ.டி!
செய்திகள்

2018இல் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கொலை வழக்கு; மனைவியைக் கைது செய்த சி.ஐ.டி!

September 8, 2026
வறட்சியான வானிலையால் 35,169 குடும்பங்கள் பாதிப்பு; குடிநீர் விநியோகம் தீவிரம்
செய்திகள்

வறட்சியான வானிலையால் 35,169 குடும்பங்கள் பாதிப்பு; குடிநீர் விநியோகம் தீவிரம்

September 8, 2026
தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
Next Post
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு