Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரையில் குழந்தையை கடத்திய நபர்; மடக்கி பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள்!

வாகரையில் குழந்தையை கடத்திய நபர்; மடக்கி பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இன்று (17) அதிகாலை வீடு ஒன்றில் நித்திரையில் இருந்த 5 வயது சிறுவனை ஒருவர், கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்ற நிலையில், பிரதேச மக்கள் சிறுவனை மீட்டதுடன் கடத்திய நபரை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

வாகரை 5ம் வட்டாரத்தைச் சோந்த 5 வயதுடைய சிறுவன், தாய் தந்தையுடன் நித்திரையில் இருந்த நிலையில், குறித்த சிறுவன் பால் கேட்டதையடுத்து தாயார் தந்தைக்கு பக்கத்தில் சிறுவனை படுக்க வைத்துவிட்டு சமையலறைக்கு சென்றுள்ளார்.

பின்னர் பால் போத்துலுடன் திரும்பி வந்தபோது நித்திரையில் இருந்த குழந்தையை காணாததையடுத்து அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு குழந்தையை தேடினர்.

வாகரையில் குடிசையிலிருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு | Virakesari.lk

இதன் போது குழந்தையை கடத்தல்காரன் ஒருவர் கடத்திக் கொண்டு காட்டுப் பகுதிக்கு செல்வதை கண்ட மக்கள் காட்டை சுற்றி தேடிய நிலையில், குழந்தையை காட்டில் விட்டுவிட்டு கடத்தல்காரன் அந்த பகுதியில் ஒளிந்திருந்த நிலையில், அவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்ததுடன் குழந்தையை மீட்டனர்.

குறித்த இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், கைது செய்யப்பட்ட கடத்தல்காரன் வாழைச்சேனை செம்மண் ஓடை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவன் எனவும் போதை பொருளுக்கு அடிமையானவன் எனவும் பல திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதுடன் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி பட்டியில் சேர்க்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காக குழந்தையை கடத்தி கப்பம் பெற இருந்துள்ளார் எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 23ம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

July 22, 2026
அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!
செய்திகள்

அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!

July 22, 2026
மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி
செய்திகள்

மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி

July 22, 2026
கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
உலக செய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

July 22, 2026
நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

July 22, 2026
Next Post
தெஹிவளைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது!

தெஹிவளைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு