ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய அமைச்சர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.
பஸில் ராஜபக்சவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு மொட்டு கட்சியின் ஆறு பேருக்கு அமைச்சுப் பதவி வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஐரோப்பிய விஜயத்தின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், ஆறு பேர் அமைச்சுப் பதவிகளுக்காக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு பொதுஜன முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியிடம் கோரியிருந்தனர்.
முன்னாள் அமைச்சர்களான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.எம் சந்திரசேன, ரேரஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, சீ.பி. ரட்நாயக்க மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
எனினும் ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற போதிலும் பசில் ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய அமைச்சுப் பதவிகளை வழங்க நேரிடுவதாக ஜனாதிபதி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.