மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கொண்ட ஐ-போன் (IPHONE) மிகவும் சிறப்பு வாய்ந்த பல அம்சங்களைக் கொண்டுள்ளதுடன் அதன் தோற்றம் மற்றும் வடிவமைப்பும் சிறப்பாக உள்ளது.
இந்த நிலையில், டாடா நிறுவனம் ஐ-போன் (IPHONE) ஐ தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சில ஆண்டுகளாக IPHONE இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இப்போது டாடா நிறுவனத்திற்கு சொந்தமான, டாடா எலக்ட்ரானிக்ஸ் நவம்பர் மாதம் முதல் ஐ-போன் ஐ உற்பத்தியை ஆரம்பிக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க நிறுவனமான அப்பிள் தனது நான்காவது ஐ-போன் யுனிட்டை இந்த வருட இறுதிக்குள் இந்தியாவில் திறக்கத் தயாராகி வருகிறது எனக் கூறப்படுகிறது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் ஏற்கனவே தமிழ்நாட்டின் ஓசூரில் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கொண்டுள்ளது.
இப்போது மேலும், சில பகுதிகளில் ஐ-போன் ஐ தயாரிக்க மற்றொரு தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இந்தத் தொழிற்சாலையில் டாடா நிறுவனம் 6000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாகவும் இதனால் சுமார் 50,000 பேருக்கு வேலை கிடைக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக சீனாவைச் சார்ந்து இருப்பதைக் குறைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.