‘தி லைன் கிங்’ திரைப்படம் 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுக்க வசூலில் சாதனை நிகழ்த்திய ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தை இயக்கிய ஜோன் ஃபவ்ரேதான் ‘தி லைன் கிங்’ படத்தை இயக்கினார். லயன் கிங் திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் 2140 திரையரங்குகளில் வெளியாகி 178 கோடி வசூலித்தது.
”தற்போது ’முபாசா தி லயன் கிங்’ திரைப்படத்துக்கு ஜெப் நாதன்சன் திரைக்கதையில் பெர்ரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் 2019ம் ஆண்டு வெளியான ‘தி லைன் கிங்’ திரைப்படத்துக்கு முன்பும் பின்பும் நடக்கும் கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நடிகர் மகேஷ் பாபு முபாசா கதாபாத்திரத்துக்கு டப்பிங் கொடுத்துள்ளார். ஹிந்தி பதிப்பில் நடிகர் ஷாருக்கான் அவரது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோருடன் இணைந்து டப்பிங் பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
குண்டூர் காரம் திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் மகேஷ் பாபு ராஜமௌலி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.