டெங்கு நோயால் இம்மாதம் மாத்திரம் 2,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவற்றில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலும் கண்டி மாவட்டத்திலும் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக விசேட வைத்தியர் அனோமா தீப்தி தெரிவித்தார்.
இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 17 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆகையால் டெங்கு நோயிலிருந்து உயிரை பாதுகாக்க சுற்று புற சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.