Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பணப்பையை ஒப்படைக்க சென்ற இளைஞன் மீது தாக்குதல்; இராணுவத்தினர் 8 பேர் கைது!

பணப்பையை ஒப்படைக்க சென்ற இளைஞன் மீது தாக்குதல்; இராணுவத்தினர் 8 பேர் கைது!

2 years ago
in செய்திகள்

பண்டாரவளை, ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி, குழப்பத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் இராணுவ சிப்பாய்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயில் நிலைய அதிபரால், பண்டாரவளை பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட தகவலுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 8.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தியத்தலாவை இராணுவ முகாமில் சேவையாற்றும் குறித்த இராணுவ சிப்பாய்கள்,

விடுமுறையில் வீடு செல்லும் வழியிலேயே இவ்வாறு ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் பண்டாரவளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலைய அலுவலக கடமையின் நிமித்தம் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அவ்வேளையில் ரயிலில் இருந்து இறங்கியுள்ள குறித்த இராணுவ சிப்பாய்கள், பாடல் பாடியுள்ளதுடன், கூச்சலும் சத்தமும் எழுப்பியுள்ளனர்.

இதன்போது அவ்வ்விடயத்தில் பணப்பை ஒன்று கீழே கிடப்பத்தை பார்த்த இளைஞன் இராணுவத்தினரிடம் இது உங்களுடையதா என்று கேட்க சென்றுள்ளார்.

இதன்போது குறித்த தமிழ் இளைஞன் மீது பணம் களவாடியுள்ளார் என் கூறி இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ரயில் நிலைய அதிபரும், அங்கிருந்தவர்களும் தாக்குதலை தடுக்க சென்றவேளை, அவர்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டு, அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் பண்டாரவளை ரயில் நிலைய அதிபர் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஆகியோரால் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் இரு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் பண்டாரவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்படவுள்ளனர்.

Tags: armyBattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!
செய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

September 9, 2026
தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!
செய்திகள்

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

September 9, 2026
பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்
செய்திகள்

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

September 9, 2026
Next Post
மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்!

மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு