ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஐரோப்பிய பயணத்தை நிறைவு செய்துள்ளதுடன், இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இன்று காலை 9.10 மணியளவில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி,
அங்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ், அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் மற்றும் யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசுலே ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் பெட்ரிசியா ஸ்கொட்லாந்து மற்றும் பிராங்கோபோன் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஐரோப்பிய பயணத்தின் போது புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டிலும் பங்கேற்றிருந்தார்.