Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ராஜபக்ஷர்களை மக்கள் முன்னிலையில் தூக்கிலிடவேண்டும்; பீல்ட் மார்ஷல் காட்டம்!

ராஜபக்ஷர்களை மக்கள் முன்னிலையில் தூக்கிலிடவேண்டும்; பீல்ட் மார்ஷல் காட்டம்!

3 years ago
in செய்திகள்

“இலங்கையை அழித்து நாசமாக்கியது ராஜபக்ஷக்களே. அவர்களை கூண்டோடு மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்”தனி நாடு கோரி போரிட்ட விடுதலைப் புலிகளை அழித்த பெருமை இராணுவத்தினரையே சாரும். இறுதிப் போருக்கு தலைமை தாங்கியவன் என்ற ரீதியிலும் முன்னாள் இராணுவத் தளபதி என்ற ரீதியிலும் இதை வெளிப்படையாகக் கூற எனக்கு முழு உரித்துண்டு. எனவே‘போர் வெற்றி நாயகர்கள்’ என்ற மகுடத்தை சூடிக்கொள்ள ராஜபக்ஷக்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. போர் வெற்றியின் பின்னர் ஆட்சியில் இருந்த ராஜபக்ஷக்கள் தங்கள் சுகபோக அரசியலுக்காக இந்த நாட்டின் வளங்களை விற்று – பொது சொத்துக்களைக் கொள்ளையடித்து இறுதியில் நாட்டையே அழித்தனர்.

அவர்கள் செய்த இந்த மோசமான செயல்களை அடுத்தே அவர்கள் கூண்டோடு அதிகாரத்திலிருந்து மக்களால் துரத்தியடிக்கப்பட்டார்கள். அதுமட்டும் போதாது ராஜபக்ஷக்களைக் கூண்டோடு மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்.பெரும் குற்றவாளிகளான ராஜபக்ஷக்களைப் பாதுகாக்கவே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல்களை நடத்த அஞ்சுகின்றார். தேசிய
ரீதியில் தேர்தல் ஒன்று நடந்தால் ஐக்கிய மக்கள் சக்தியே ஆட்சிக்கு வரும். அது ராஜபக்ஷக்களுக்கும் தனக்கும் பாதகமாக அமையும் என்று ரணில் எண்ணுகின்றார்.” – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையில் 29 கோடி பெறுமதியான கம்பிகள் மாயம்!

கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையில் 29 கோடி பெறுமதியான கம்பிகள் மாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு