மன்னார் உயிலங்குளம் சந்தியில் இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடம்பன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காயமடைந்துள்ளார்.
பொலிஸ் கான்ஸ்டபிள், தனது கடமைகளை முடித்துவிட்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.