மட்டக்களப்பு குருக்கள் மடம் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியினரின் அரசியல் கலந்துரையாடலொன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை (08) காலை இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் தோழர் திலிப்குமார் கலந்துகொண்டிருந்தார்.
நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடிகள் பற்றியும், செப்டம்பர் 21 தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை ஏன் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்பது பற்றியும் இக் கலந்துரையாடலில் விரிவாகப் பேசப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.