கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் (12) முன்னெடுக்கபப்ட்ட சோதனை நடவடிக்கையில், தனது வீட்டின் பின்புறமாக கசிப்பு காச்சிக்கொண்டிருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
இதன்போது அங்கிருந்த 24 லீற்றர் கசிப்பும் 130 லீற்றர் கோடாவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் மற்றும் தடய பொருட்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.