ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் துண்டுப்பிரசுரத்தை நிராகரித்ததாக கூறப்படும் நபரை தாக்கிய குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி, பவ்வாகம பகுதியைச் சேர்ந்த நாற்பத்தொரு வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.