ஏதோ ஒரு மாற்றம் வேண்டும் அந்த மாற்றத்தின் ஊடாக மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காகத்தான் இந்த மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க தயாராகி இருக்கின்றார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.
நேற்று(18) மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்தும் சிறியவர் தொடக்கம் பெரியவர் வரை அனைவருக்கும் தெரிந்த விடயம். ஊழல் இங்கு இருக்கின்ற வளங்களை சுரண்டுதல், வளங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு அதன் மூலமாக பெரிய அளவிலான ஒரு ஜனநாயக முறை செயலிழந்து போய் உள்ளது.
மட்டக்களப்பில் எங்கு பார்த்தாலும் கசிப்பு உற்பத்தி பெருகி கொண்டிருக்கின்றது. அதேபோன்று வளங்களின் சுரண்டல்களுக்கு எதிராக குரல் கொடுத்த பத்திரிகையாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
பத்திரிகையாளர்கள் மாத்திரம் அல்லாது எத்தனையோ அப்பாவி தமிழ் மக்கள் அடி உதை மறைமுகமான சித்திரவதைகளுக்குள் உள்ளாகி இருக்கின்றார்கள் இவை அனைத்தினையும் வேரோடு அரைப்பதற்காகத்தான் தேசிய மக்கள் சக்தியோடு மக்கள் வாக்களிக்க துணிந்து விட்டார்கள்.
ஏதோ ஒரு மாற்றம் வேண்டும் அந்த மாற்றத்தின் ஊடாக மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காகத்தான் இந்த மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க தயாராகி இருக்கின்றார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகள் மக்களுக்கு பிடித்ததாக இருப்பதன் காரணத்தினால் இந்த நாடே அனுரகுமார திசாநாயக்கவுடன் சேர்ந்து நிற்கின்றது.
இந்த ஜனாதிபதி தேர்தலில் 22 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகளின் படி பிரதிபலிப்பு வெளிப்படையாக விளங்கும் என நினைக்கின்றேன். தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு இலங்கை பூராகவும் வியாபித்து இருக்கின்ற இந்த நிலையில், தமிழர்களாகிய நாம் தேசிய மக்கள் சக்திக்கு பங்களிப்பு செய்வதன் மூலம் எமது பகுதிகளும், எமது பிள்ளைகளும் வளமான பாதையை எதிர்நோக்கிய பயணத்தில் பங்காளிகளாக இருப்பதற்கே தேசிய மக்கள் சக்திக்கு நாங்கள் ஆதரவு அளிக்கின்றோம்.
எமது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் மக்களின் பங்களிப்போடு புதிய நாட்டைக் கட்டி எழுப்பும் அனுரகுமார திசாநாயக்கவின் செயற்பாட்டிற்கு நாங்களும் நின்று ஒத்துழைப்போம். இப்போது கூறித் தருகின்றார்கள் கேஸ் வரிசையினை இல்லாது செய்தோம் வரிசையினை இல்லாது செய்தோம் என கூறுகின்றார்கள்.
இந்த வரிசை யுகத்தினை கொண்டு வந்ததற்கான காரணத்தினை அவர்கள் உணர்கின்றார்கள் இல்லை இந்த வரிசை யுகம் வருவதற்கு காரணம் இந்த ஊழல்வாதிகளே இப்போது கூறுகின்றார்கள் மீண்டும் இந்த வரிசை யுகம் வரும் என்று மீண்டும் வருவதற்கான காரணம் எதுவும் இல்லை.
ஏனென்றால் அவர்கள் ஒருவரும் பெட்ரோலை இறக்குவதற்கு அவர்கள் ஷேக் இல்லை கேஸ் இறக்குமதி செய்வதற்கு அவர்கள் கேஸ் உரிமையாளர்கள் இல்லை. இவர்கள் செய்த இந்த வேலைகளினால் தான் இந்த வரிசை யுகம் ஏற்பட்டதும், மக்கள் இந்த கொடுமைகளை அனுபவித்ததும். இனியும் அந்த கொடுமைகள் வேண்டாம் என்பது மக்களுக்கு தெரியும்.
ஜ.எம்.எப் இடமிருந்து பெற்ற கடன் என்பவை இதுவரை செலுத்தப்படவில்லை செலுத்தப்படாத கடன் தொகை இருக்கின்ற நிலையில் நாங்கள் இன்னமும் வட்டியை கூட சரியாக செலுத்தவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் ஒரு சில அரசியல்வாதிகள் கூறப்பட்ட ஆண்டு பொருளாதார நிபுணர்கள் என்கின்ற ரீதியில் பேசுகின்றார்கள். அவர்கள் நினைக்க கூடாது அவர்கள் மாத்திரம் தான் பொருளாதாரம் படித்தது என்று.
அனுரகுமார திசாநாயக்க உடன் பொருளாதாரம் படித்த எத்தனையோ பேர் இணைந்துள்ளனர். எத்தனையோ பேர் வாக்களிப்பதற்காகவும் இந்த நாட்டை சுபிட்சமான பாதைக்கு கொண்டு செல்வதற்குமாக விரிவுரையாளர்கள் நமது நாட்டிற்கு மீண்டும் வருகின்றார்கள்.
இவ்வாறான உதவிகள் கிடைக்கப் பெறுகின்ற நேரத்தில் நாட்டை கட்டி எழுப்புவதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது என மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு சில அரசியல்வாதிகள் கொழும்பில் இருந்து கொண்டு தாங்கள் மாத்திரம் தான் பொருளாதார நிபுணர்கள் என கூறுகின்றார்கள். அவர்கள் பொருளாதாரத்தில் அரை நிபுணர்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் முழு பொருளாதார நிபுணர்கள் அல்ல. ஏனென்றால் இந்த பிரச்சனை ஏற்படும் போது அவர்கள் அரை நிபுணர்களாகவே இருந்தார்கள்.
ஒருவரும் அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவர்கள். எதிரான அரசாங்கம் ஒழிய வேண்டும் என்று.