Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது சிறுமி உட்பட 6 பேர் உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது சிறுமி உட்பட 6 பேர் உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள்

அம்பாறை காரைதீவு, கிளிநொச்சி, வெயாங்கொடை, கட்டுகஸ்தோட்டை , வவுனியா ஓமந்தை பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது சிறுமி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் 4 பேரை கைது செய்துள்ளதாக அந்தந்த பிரதேச பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை (19) அம்பாறை- காரைதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிப்பள்ளியில் இருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுடன் குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய தந்தை படுகாயமடைந்ததுடன் அவருது 14 வயது மகளான சிறுமி உயிரிந்துள்ளதுடன் படுகாயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளனர்.

அதேவேளை கிளிநொச்சியில் கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் நேற்று (19) அதிகாலை வீதியால் சென்று கொண்டிருந்த இளைஞன் மீது டிப்பர் வாகனம் மோதிய விபத்தில் பன்னங்கண்டி பகுதியைச்சேர்ந்த அந்தோனி அல்பிரட் அனுஷன் என்ற இளைஞன் உயிரிழந்ததுடன் டிப்பர் சாரதியை கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் சம்பவதினமான நேற்றுமுன்தினம்(18) மாலைவேளை பிரயாணித்த மோட்டார் சைக்கிள் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வீதி ஓரத்தில் துவிச்சக்கரவண்டி ஒன்றுடன் நின்றிருந்வர் மீத மோதிய விபத்தில் மோட்டாரில் பிரயாணித்த ஓமந்தை பகுதியைச் சேலர்ந்த 46 மற்றும் 48 வயதுடைய இருவர் ஒயிரிழந்துள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை வெயாங்கொடை மினுவாங்கொடை பிரதான வீதியில் 20 மையில்கல் பகுதியில் வீதியை குறுக்கறுத்த பெண் ஒருவர் மீது மொட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் படுகாயமடைந்த வத்தகா வெயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண்ணை மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார் இதனையடுத்து மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவரை பொலிசார் கைது செய்தனர்

கண்டி-யாழ்ப்பாணம் ஏ-09 வீதியில் கட்டுகஸ்தோட்டை நகரில் பாதசாரி ஒருவர் மீது கார் மோதிய விபத்தில் 71 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து கார்சாரதியை கைது செய்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து இடம்பெற்ற பிரதேசங்களச் சேர்ந்த பொலிஸ் நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களுக்கு தடைவிதித்த கத்தார் ஏர்வேஸ் நிறுவனம்!

வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களுக்கு தடைவிதித்த கத்தார் ஏர்வேஸ் நிறுவனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.