எரிபொருளின் விலையில் இன்று (30) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
பெரும்பாலும் எரிபொருளின் விலை குறைக்கப்படலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் கடந்த மாதம் 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் புதிய அரசாங்கம் சொன்னது போல எரிபொருள் விலை குறைக்கப்படுமா? அல்லது இதே விலையில் தொடரப்போகிறதா என்று தெரியவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.