Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வரலாற்று சாதனையை பதிவு செய்த கிழக்கு மாகாணம்!

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வரலாற்று சாதனையை பதிவு செய்த கிழக்கு மாகாணம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வரலாற்றில் முதல் முறையாக 2023ம் கல்வியாண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கிழக்கு மாகாணம் ஆறாம் இடத்தில் இருந்து தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்த ஆசிரியர்கள், அதிபர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர், கல்வி செயலாளர் உட்பட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் கிழக்கு மாகாண சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், மேலும் மாணவர்களை ஊக்கமளித்த பெற்றோர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த அவர்கள்,

“தேசிய மட்டத்தில் 6ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்திற்கு வருவது என்பது நடைமுறை சாத்தியம்.
ஆனால் 2ஆம் இடத்திற்கு முன்னேறியமை என்பது வரலாற்று சாதனை என்பதோடு இதற்கு மாணவர்களின் கடின உழைப்பும் கிழக்கு மாகாண சபையின் புதிய சிறந்த கல்வி கொள்கையுமே காரணம் என அறியமுடிகிறது.

கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்றவுடன் கல்வி அமைச்சர் இல்லாத சூழ்நிலையில் கல்வி அமைச்சராகவும் அவர் செயற்பட்டார். பல வருடங்களாக இருந்த கிழக்கு மாகாண கல்வி கொள்கைகளில் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தினார். நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய கொள்கைக்கு எதிராக ஏராளமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

அப்போராட்டங்களுக்கு அவர் அளித்த விளக்கங்கள், நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் சரியானவை என்பது இந்த வருட பெறுபேறுகளில் தெரியும் என தெரிவித்ததோடு,அதற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

கல்விக்கு அவர் வழங்கிய முக்கியத்துவம் இன்று க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்திற்கு முன்னேற முக்கிய காரணியாக திகழ்ந்தது” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்,

“கல்வி என்பது அனைவருக்கும் சென்றடைய வேண்டும். கல்வியில் வளர்ச்சி ஏற்பட்டால் மாத்திரமே பொருளாதாரம் வளரும் எனவும், கல்வி கொள்கையில் பல மாற்றத்தை கொண்டு வந்தேன். பல விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது.

விமர்சனங்களுக்கு அஞ்சினால் வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியாது என்பதை நான் நன்றாக அறிந்தவன். என்னதான் நான் கொள்கைகளை நிலைநாட்டி, கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்திருந்தாலும் அதற்கான முழு பாராட்டுகளும் மாணவர்கள்,ஆசிரியர்கள், அதிபர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர், கல்வி செயலாளர், பெற்றோர்கள் என அனைவரையும் சேரும்.” என தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
பெற்றோல், டீசல் விலை குறைப்பு!

பெற்றோல், டீசல் விலை குறைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.