கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒடியன் சந்திக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 10 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.