Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இனப்பிரச்சனைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் பணியை தொடர வடகிழக்கு மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும்; கஜேந்திரன் தெரிவிப்பு!

இனப்பிரச்சனைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் பணியை தொடர வடகிழக்கு மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும்; கஜேந்திரன் தெரிவிப்பு!

2 years ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

வடகிழக்கில் இருத்து எமது அணிக்கு ஏகோபித்த அங்கிகாரம் வாழங்கப்படுவதன் மூலம் எமது இனப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் பணியை நாம் மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடக சந்திப்பு நேற்று (08) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இதன் போது முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கலந்து கொண்டு பின்வருமாரு கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடகிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டத்திலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடவுள்ள நிலையில் தமது வேட்பு மனுவினை தாக்கல் செய்து வருகின்றோம்.

75 வருடங்களாக ஆட்சியில் இருந்தவர்கள் மக்களுக்காக எதையும் செய்யாத நிலையில்
தற்போது ஒரு ஆட்சி மாற்றத்தினை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இவர்களும் கூட தமிழ் மக்களுக்காக எதையும் செய்யப் போவதில்லை.

2009 பிரபாகரன் தலைமையிலான உரிமை போராட்டம் நிறைவுற்றதும் தமிழ் தேசம் ஒரு ஆபத்தான நிலையில் உள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களினால் இவைகள் தெளிவுபடுத்தப்பட்டு வருவதாலேயே தமிழ் தேசியம் இன்றும் உயிருடன் இருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எமக்கு மேற்கொள்ளப்பட்டது மனித உரிமை மீறல் தொடர்பாக 15 தடவைகள் அங்கு சென்று உரக்கக் கூறியது எமது தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாத்திரமே.

அத்தோடு கொழும்பிலோ, வெளிநாட்டிலோ, எமக்கான தூதுவர்களிடமோ, ஏனையவர்களிடமோ எமது தீர்வுக்கான ஆரம்ப புள்ளி 13 அல்ல என்பதை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இன நல்லுறவு ஏற்படுத்தப்பட வேண்டுமானால் சமஸ்டியே தீர்வு என கூறும் ஒருவர் எமது தலைவர் மாத்திரமே.

மட்டக்களப்பு அம்பாறை மற்றும் ஏனைய மாவட்டங்களில் எமது மக்களுக்கான போராட்டங்களில் எமது தலைவர் முன்னின்று செயற்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டுமுள்ளார்.

மயிலத்தமடுவிற்கு கூட எமது தலைவர் வருகை தந்த போது பௌத்த பிக்குவினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

அங்கு சிங்கள மயமாக்கல் மேற்கொள்ள முயற்சித்த போது எமது தலைவர் முன்னிற்று செயற்பட்டவர்.

வடகிழக்கில் இருத்து எமது அணிக்கு ஏகோபித்த அங்கிகாரம் வாழங்கப்படுவதன் மூலம் எமது இனப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் பணியை நாம் மேற்கொள்ள இலகுவாக இருக்கும்.

தென் தமிழ் ஈழம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டக்களப்பிலும் போட்டியிடும் 8 வேட்பாளர்களுக்கும் உங்களது பூரண ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்வதுடன், போதைப்பொருள் வர்த்தகத்தில், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஒழிக்கப்பட வேண்டும அதற்காக எமது அணிக்கு ஆதரவு வழங்க வேண்டும். எமது இருப்பை பாதுகாக்க வேண்டும் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்
செய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

July 26, 2026
விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்
செய்திகள்

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்

July 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

July 26, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

July 26, 2026
தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

July 26, 2026
அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
Next Post
அதிகரிக்கும் இணையவழி வங்கி மோசடிகள்!

அதிகரிக்கும் இணையவழி வங்கி மோசடிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.