கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் கல்முனையைச் சேர்ந்த எஸ்.பாலுராஜ் என்ற வீரர் தங்கப்பதக்கத்தினை தனதாக்கிக் கொண்டார்.
அம்பாறை கல்முனை- சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ்.பாலுராஜ், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் (2020-2023) ஆண்டுகள் வரை நடைபெற்ற தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் தொடர்ச்சியாக தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்து வருகிறார்.
அதன்படி, இவ்வருடமும் (2023) கொழும்பு சுகததாசவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கப்பதக்கத்தினை பெற்று தான்பிறந்த மண்னுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தொடர்ச்சியாக 8 வருடங்களாக ஒன்பது பதக்கத்தினை தனதாக்கிக் கொண்டுள்ள அதேசமயம், மூன்று தடவைகள் best player எனும் பட்டத்தினையும் இவர் சுவீகரித்துள்ளார்.
இந்நிலையில் வெற்றிபெற்ற வீரருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றது.