Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு; தீவிர தேடுதலில் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு; தீவிர தேடுதலில் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர்

2 years ago
in செய்திகள்

சட்டவிரோதமான முறையில் ஒருங்கினைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிக்க அவகாசம் கோரிய நிலையில், தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விசாரணையை முன்னெடுக்க விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் அவரை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், மேலும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு மற்றும் தங்கும் இடங்களில் நடத்திய சோதனையில் அவர் பற்றிய எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகிறது.

அண்மையில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் சர்ச்சைக்குறிய கார் தொடர்பான வாக்குமூலத்தைப் பெற குற்றத்தடுப்பு பிரிவுக்கு வருமாறு தெரிவித்திருந்த போதிலும், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி அதைத் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு ஒன்றையும் கடந்த 10.10.2024 அன்று பிறப்பித்திருந்தது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சொகுசு வாகனம் எவ்வாறு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது, ​​யார் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மின்மினிப் பூச்சிகளை நேரில் காணும் கடைசித் தலைமுறையா நாம்?
செய்திகள்

மின்மினிப் பூச்சிகளை நேரில் காணும் கடைசித் தலைமுறையா நாம்?

October 29, 2026
தாய் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுவன்; பிள்ளைகளின் மனநிலை குறித்து எழும் கேள்வி!
செய்திகள்

தாய் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுவன்; பிள்ளைகளின் மனநிலை குறித்து எழும் கேள்வி!

October 29, 2026
நிந்தவூரில் கோழி இறைச்சியின் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயம்; தவறினால் சட்ட நடவடிக்கை!
செய்திகள்

நிந்தவூரில் கோழி இறைச்சியின் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயம்; தவறினால் சட்ட நடவடிக்கை!

October 29, 2026
“ஜனாதிபதியை தூக்கி நிலத்தில் அடிப்போம்”; உலப்பனே சுமங்கல தேரர்
செய்திகள்

“ஜனாதிபதியை தூக்கி நிலத்தில் அடிப்போம்”; உலப்பனே சுமங்கல தேரர்

October 29, 2026
சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயத்தில் இலங்கையின் புதிய சட்டமூலம்!
செய்திகள்

சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயத்தில் இலங்கையின் புதிய சட்டமூலம்!

October 29, 2026
மட்டு நாவலடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மட்டு நாவலடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

October 29, 2026
Next Post
வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வழங்குபவர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வழங்குபவர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு