Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பை சேர்ந்த பேராதனை பல்கலைக்கழக மாணவன் விடுதியில் தற்கொலை முயற்சி!

மட்டக்களப்பை சேர்ந்த பேராதனை பல்கலைக்கழக மாணவன் விடுதியில் தற்கொலை முயற்சி!

3 years ago
in முக்கிய செய்திகள்

பேராதனை பல்கலைக்கழகத்தின் சுகாதார பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர் நேற்று விபரீத முடிவெடுத்து உயிர்மாய்க்க முயற்சித்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விடுதியின் இரண்டாவது மாடியில் உள்ள அறையொன்றில் குறித்த மாணவன் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்க்க முயற்சித்த போது கீழே விழுந்து காயமடைந்த நிலையில் மாணவர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவரே இந்த விபரீத முடிவினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த மாணவன் நேற்றிரவு ஏனைய மாணவர்களுடன் இரவு உணவு உண்பதற்காக வெளியில் செல்லாத நிலையில், நண்பர்கள் அவருக்கு உணவு கொண்டு வந்து அறை கதவினை தட்டி திறக்காத காரணத்தினால் அருகில் உள்ள ஜன்னல்கள் வழியாக அறைக்குள் நுழைந்து தேடியபோது, ​​மாணவன் தரையில் காயமடைந்து கிடந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் புதிய மாணவர்களை இணையத்தில் ஆபாசமான காட்சிகளைக் காட்டி துன்புறுத்திய குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட நான்கு மாணவர்களில் இந்த மாணவரும் ஒருவர் எனவும் கூறப்படுகின்றது.

துன்புறுத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக நான்கு மாணவர்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், விசாரணையை எதிர்கொள்ள மூன்று மாணவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளனர்.

இருப்பினும், குறித்த மாணவன் இதுவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செல்லவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
இரண்டு பெண்களுடன் மாட்டிக்கொண்ட பிக்கு விகாரை திரும்பினார்; எதுவும் நடக்கவில்லை என நவகமுவ பாதுகாப்பு அமைப்பு அறிக்கை!

இரண்டு பெண்களுடன் மாட்டிக்கொண்ட பிக்கு விகாரை திரும்பினார்; எதுவும் நடக்கவில்லை என நவகமுவ பாதுகாப்பு அமைப்பு அறிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு