Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டக்ளஸ் தேவானந்தாவின் உதவியாளருக்காக வீணடிக்கப்பட்டுள்ள அரச பணம்

டக்ளஸ் தேவானந்தாவின் உதவியாளருக்காக வீணடிக்கப்பட்டுள்ள அரச பணம்

2 years ago
in செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளருக்குப் பயன்பாட்டுக்கு என்னும் பெயரில் அரச செயலகத்தின் விடுதி இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபருக்கு வழங்கப்பட வேண்டிய விடுதியே இவ்வாறு அரசியல்வாதியான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் தனிப்பட்ட அலுவலரான அவரது இணைப்பாளருக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டு வந்தார். டக்ளஸ் தேவானந்தாவின் காலத்திலேயே இந்த விடுதி இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்புக் குழுவின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலக சுற்றுநிருபத்தில் விடயங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு ஒரு தனிப்பட்ட அலுவலருக்கு அரச விடுதி வசதி வழங்குவது குறித்துக் குறிப்பிடப்படாதபோதும் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் இந்த விடுதி வசதி சட்டமுரணாக வழங்கப்பட்டுள்ளது.

சட்டமுரணாக இந்த விடுயைக் கிளிநொச்சி மாவட்டத்தின் அப்போதைய அரச அதிபரான ரூபவதி கேதீஸ்வரன் வழங்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது. இந்த விடுதியில் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியாளரே தங்கியிருந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக மாவட்ட செயலகத்தின் விடுதியில் தங்கியிருந்தமை மட்டுமன்றி அதற்கான வாடகைக் கொடுப்பனவு, மின்சாரக் கட்டணம் எவையும் அவரால் செலுத்தப்படவில்லை.

வாடகையோ அல்லது மின்சாரக் கட்டணமோ செலுத்தாமல் தங்கியிருந்த விடுதியின் இரண்டு ஆண்டு கால மின்சாரக் கட்டணம் மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பு அலுவலக செலவில் இருந்து கட்டப்பட்டுள்ளது என மாவட்ட செயலகம் எழுத்து மூலம் வழங்கிய தகவல் அறியும் சட்டத்தின் கீழான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலகத்தின் அரச விடுதியை சம்பந்தப்பட்டவருக்கு வழங்க இணக்கம் தெரிவித்து 2020.11.10 அன்று அப்போதைய மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளருக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் விடுதிக்கான மின்சாரக் கட்டணத்தைத் தங்களால் நேரடியாகச் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளருக்கு விடுதியை வழங்குவதற்கான 2020.11.10 ஆம் திகதிய இணக்கக் கடிதத்தில் குறிப்பிட்டவாறான மின்சாரக் கட்டணம் அந்தக் கடித ஏற்பாட்டுக்கு மாறாக ஒருங்கிணைப்பு அலுவலக செலவில் இருந்து செலுத்தப்பட்ட காலத்திலும் அதே அரச அதிபரே பணியில் இருந்துள்ளார்.

இவற்றின் மூலம் இந்த விடுதிக்கான பொருளாதார வாடகை கணிப்பு மற்றும் மின்சாரக் கட்டணம் ஆகியவற்றுக்கு அரச பணம் வீணடிக்கப்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது!
செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

July 23, 2026
வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் உத்தரவு; சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் உத்தரவு; சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

July 23, 2026
மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்; தீவிர தேடுதல் நடவடிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்; தீவிர தேடுதல் நடவடிக்கை!

July 23, 2026
சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; செங்கடலில் பதற்றம் தீவிரம்!
உலக செய்திகள்

சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; செங்கடலில் பதற்றம் தீவிரம்!

July 23, 2026
இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!
செய்திகள்

இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!

July 23, 2026
மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
செய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

July 23, 2026
Next Post
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.