Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூரில் ஓய்வு பெற்ற அதிபருடன் ஓரினச்சேர்க்கை; கப்பம் கேட்ட இளைஞன் கைது

ஏறாவூரில் ஓய்வு பெற்ற அதிபருடன் ஓரினச்சேர்க்கை; கப்பம் கேட்ட இளைஞன் கைது

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஏறாவூரில் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்து அவரை அச்சுறுத்தி கப்பமாக 25 ஆயிரம் ரூபா பணம் கோரிய 21 வயது இளைஞன் ஒருவரை நேற்று முன்தினம் (19) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் உள்ள பாடசாலை ஒன்றில் 2014ம் ஆண்டு அதிபராக கடமையாற்றி வந்தபோது வேறு ஒரு பாடசாலையில் கல்வி கற்று வந்த சிறுவன், அங்கு சிறுமி ஒருவருடன் ஏற்பட்ட தகாத முறையினால் அவரை கைது செய்து பின்னர் அங்கிருந்து குறித்த அதிபரின் பாடசாலைக்கு இடமாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், குறித்த சிறுவனுடன் அதிபர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுவந்துள்ள நிலையில், அதிபர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றுள்ளார்.

சிறுவனும் பாடசாலை கல்வியை முடித்து வெளியேறிய நிலையில், இருவரும் தொடர்ந்து ஓரினச்செர்க்கையில் ஈடுபட்டுவந்துள்ளனர் இதன்போது அதனை குறித்த இளைஞன் வீடியோ எடுத்துள்ளார்.

இவ்வாறான நிலையில் குறித்த இளைஞன் ஓய்வு பெற்ற அதிபரிடம் வீடியோவை வெளியிடுவேன் என அச்சறுத்தி 9 லட்சம் ரூபா பணம் தருமாறு கோரிய நிலையில் இளைஞனிடம் பணம் வழங்கியதற்கான கடிதம் ஒன்றை வாங்கி கொண்டு அந்த பணத்தை அதிபர் அவருக்கு வழங்கியுள்ளார்.

இதன் பின்னர் குறித்த இளைஞன் ஓய்வு பெற்ற 63 வயதுடைய அதிபரிடம் மீண்டும் தனக்கு 5 லட்சம் ரூபா பணம் தருமாறும் அல்லது வீடியோவை வெளியிடப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து 25 ஆயிரம் ரூபா மட்டும் தருவேன் என தெரிவித்துவிட்டு தனக்கு நேர்ந்த கதி தொடர்பாக பொலிசாரிடம் ஓய்வு பெற்ற அதிபர் முறைப்பாடு செய்த நிலையில், பொலிசாரின் ஆலோசனைக்கமைய குறித்த இளைஞனை வெளியிடம் ஒன்றுக்கு அதிபர் வரவழைத்து பணத்தை வழங்கும் போது அங்கு மாறவேடத்தில் இருந்த பொலிசார் அந்த இளைஞனை சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு