மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளி கிராமத்தினுள் கடந்த இரு நாட்களாக காட்டு யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் அலைந்து சுற்றித் திரிகின்றதை அவதானிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோப்பாவெளி பகுதியில் மக்கள் வாழும் குடியிருப்பு மற்றும் வயல் பகுதிகளிலுள் நேற்று முதல் தற்போது வரை குறித்த யானையானது அலைந்து திரிகின்றது. குறித்த யானையானது நேய்வாய்ப்பட்டு பரிதாபமாக சுற்றிதிரிவதை தாம் அறியமுடிவதாகவும், எனினும் தாம் அச்சத்தின் மத்தியில் கிராமங்களில் செல்ல வேண்டியுள்ளதாவும் கோப்பாவெளி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குறித்த யானைக்கான சிகிச்சையை தொடர்பில் வனவிலங்கு உத்தியோகத்தர்கள் கவனம் செலுத்துமாறும் யானையை காட்டிற்குள் அனுப்புமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.