பிரதான குடிநீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகமே வழங்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் வத்தளை, மாபோல, ஜா-எல, கட்டுநாயக்க-சீதுவ நகர சபை பகுதிகள், அத்துடன் வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான மற்றும் மினுவாங்கொட பிரதேச சபை பகுதிகளிலும் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் வழங்கப்படும்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், குறைந்த நீர் அழுத்தத்தை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முடிந்தவரை விரைவாக சாதாரண நீர் விநியோகத்தை மீட்டெடுக்க முயற்சிகள் நடந்து வருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.