Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை; ஜனாதிபதி திட்டவட்டம்

வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை; ஜனாதிபதி திட்டவட்டம்

8 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எத்தகைய வேலைநிறுத்தங்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், நியாயமற்ற கோரிக்கைகளுக்கு இத்தருணத்தில் தீர்வுகளை வழங்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ‘வரவு செலவுத் திட்டமும் உழைக்கும் மக்களும்’ – தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாடு சிறந்த நிதி ஒழுக்கத்துடன் நிர்வகிக்கப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் வருமானம் 6,230 பில்லியன் ரூபாவாக உள்ள நிலையில், சம்பளம் மற்றும் கடன் தவணைகள் உள்ளிட்ட செலவினங்கள் 7,035 பில்லியன் ரூபாவாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, ஈட்டப்படும் வருமானம் சம்பளம் மற்றும் கடன்களைச் செலுத்துவதற்குக் கூடப் போதுமானதாக இல்லாததால், அதற்காக 805 பில்லியன் ரூபாவைக் கடனாகப் பெற வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஏதேனும் ஒரு செலவினத்தை அதிகரிக்க வேண்டுமாயின் கடன் பெற வேண்டும் அல்லது வேறு ஒரு செலவினத்தைக் குறைக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மூலதனச் செலவினங்களுக்காக 2,000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அன்றாடத் தேவைகளை மாத்திரம் பூர்த்தி செய்யும் பொருளாதாரமாக அன்றி, நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

உழைக்கும் போதே செலுத்தும் வரி (PAYE) தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, 162,500 ரூபா மாதாந்த வருமானத்தைக் கடக்கும் போது வரி அறவிடப்படுவதாகவும், 433,000 ரூபா சம்பளம் பெறுபவர் 36% வரி வீதத்திற்கு உட்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அந்த வரி எல்லையை அடுத்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேலும் உயர்த்த எதிர்பார்ப்பதாகவும், அதனை 5 இலட்சம் ரூபா வரை கொண்டு வருவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரச சேவையின் அடிப்படைச் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் இடம்பெறாத வகையில் அடிப்படைச் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அதற்கமைய, ஆரம்ப நிலை வைத்தியரின் சம்பளம் 54,290 ரூபாவிலிருந்து 2027 ஜனவரியளவில் 94,150 ரூபாவாக அதிகரிக்கும் எனவும், முதலாம் தர அதிபர் ஒருவரின் சம்பளம் 58,000 ரூபாவிலிருந்து 103,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் எனச் சிலர் நினைக்கின்ற போதிலும், அவ்வாறு கோரிக்கைகளை முன்வைத்தவுடன் அவற்றை வழங்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்தார்.

கூச்சலிடுவதற்கு முன்னரே நாம் பிரச்சினைகளைத் தீர்க்கின்றோம். தீர்வு வழங்க முடியாதவற்றுக்குத் தீர்வு வழங்க முடியாது. அதுதான் உண்மையான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திடம் பணம் இருக்குமாயின் சம்பளத்தை அதிகரிக்க முடியாதது ஏன் எனச் சிலர் கேள்வி எழுப்புவதாகக் கூறிய ஜனாதிபதி, ஒரு அரசாங்கம் நாட்டின் தற்போதைய நிதி நிலைமையைக் கருத்திற்கொண்டே செயற்பட வேண்டும் எனவும், இயலுமான அளவிற்குச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் நோயுற்ற பெண்ணை வீதியில் கைவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!; பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

மட்டக்களப்பில் நோயுற்ற பெண்ணை வீதியில் கைவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!; பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதி

November 27, 2026
மாமாங்கத்தில் 15 இற்கும் மேற்பட்டோரைக் கடித்த குரங்கு பிடிப்பு!
செய்திகள்

மாமாங்கத்தில் 15 இற்கும் மேற்பட்டோரைக் கடித்த குரங்கு பிடிப்பு!

November 26, 2026
பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது
செய்திகள்

பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது

November 26, 2026
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினை: 1,572 ஏக்கர் காணி தொடர்பில் இரு வாரங்களுக்குள் நிலைப்பாட்டை அறிவிக்க உத்தரவு
செய்திகள்

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினை: 1,572 ஏக்கர் காணி தொடர்பில் இரு வாரங்களுக்குள் நிலைப்பாட்டை அறிவிக்க உத்தரவு

November 26, 2026
13 ஆண்டுகளுக்குப் பிறகு ITN அரச தொலைக்காட்சி சேவை 35 மில்லியன் நிகர லாபத்தை ஈட்டியது; 30% திறைசேரிக்கு வழங்கத் திட்டம்!
செய்திகள்

13 ஆண்டுகளுக்குப் பிறகு ITN அரச தொலைக்காட்சி சேவை 35 மில்லியன் நிகர லாபத்தை ஈட்டியது; 30% திறைசேரிக்கு வழங்கத் திட்டம்!

November 26, 2026
மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர் பதவி விலகல் கடிதம் சமர்ப்பிப்பு!
செய்திகள்

மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர் பதவி விலகல் கடிதம் சமர்ப்பிப்பு!

November 26, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.