யாழ். நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சற்றுமுன்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி துண்டுப்பிரசுரம் விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் இன்று(24) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டு பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.