Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ். பல்கலைக்கழக மாணவர் மோதல்: 21 பேர் விளக்கமறியலில் – உள்ளக விசாரணையும் ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழக மாணவர் மோதல்: 21 பேர் விளக்கமறியலில் – உள்ளக விசாரணையும் ஆரம்பம்!

12 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவப் பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 மாணவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி இரவு, மாணவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதியொன்றில் முகாமைத்துவப் பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர் குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளுக்கு மேலதிகமாகப் பல்கலைக்கழக நிர்வாகமும் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி இதனைத் தெரிவித்துள்ளார்.

மோதல் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே இடம்பெற்றிருந்தாலும், பொலிஸாரின் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், மோதலுக்கான காரணங்களைக் கண்டறிந்து எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சந்தைகளில் சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு!
செய்திகள்

சந்தைகளில் சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு!

November 22, 2026
வருமான வரிக் கணக்குகளைச் சமர்ப்பிக்க நவம்பர் 30 இறுதி நாள் – இறைவரித் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

வருமான வரிக் கணக்குகளைச் சமர்ப்பிக்க நவம்பர் 30 இறுதி நாள் – இறைவரித் திணைக்களம் அறிவிப்பு!

November 22, 2026
கொள்ளுப்பிட்டி பகுதியில் சடலத்தை வீதியில் வீசிச்சென்ற முச்சக்கர வண்டி
செய்திகள்

கொள்ளுப்பிட்டி பகுதியில் சடலத்தை வீதியில் வீசிச்சென்ற முச்சக்கர வண்டி

November 22, 2026
மஞ்சள் சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி போலி லிட்ரோ சிலிண்டர்களாக மாற்றி விற்பனை
செய்திகள்

மஞ்சள் சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி போலி லிட்ரோ சிலிண்டர்களாக மாற்றி விற்பனை

November 22, 2026
2027 முதல் இலங்கையிலுள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அறிமுகம்!
செய்திகள்

2027 முதல் இலங்கையிலுள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அறிமுகம்!

November 22, 2026
காத்தான்குடி உட்பட 12 பொலிஸ் நிலையங்கள் புனரமைப்பு; பொலிஸ் மா அதிபர் திறந்து வைப்பு!
செய்திகள்

காத்தான்குடி உட்பட 12 பொலிஸ் நிலையங்கள் புனரமைப்பு; பொலிஸ் மா அதிபர் திறந்து வைப்பு!

November 22, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு