Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொதுத்தேர்தல் நடைபெறும் திகதியில் மாற்றம்?

பொதுத்தேர்தல் நடைபெறும் திகதியில் மாற்றம்?

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக, அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும் ஏழு வாரங்களுக்கு மிகையாகமலும் வாக்கெடுப்புக்கான திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்று, சட்டம் தெளிவாகக் கூறுகிறது என்று, நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதன்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் கணக்கிடப்படும் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் மாதம் 14ஆம் திகதி, சட்டக் காலத்தில் இடம்பெறாததால், அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது எனவும், அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது மக்களின் இறையாண்மையை மீறுவதாக, அறிஞர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையகமும் கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது. சட்ட ஆலோசனைக்கு பின்னர், நாடாளுமன்ற தேர்தல் திகதி மாற்றப்படும் என, அரச வட்டாரத் தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, புதிய திகதியைக் குறிப்பிட்டு புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

August 1, 2026
இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது
செய்திகள்

இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

August 1, 2026
நீர்கொழும்பு கடற்பகுதியில் பல மீன்பிடி படகுகள் விபத்து
செய்திகள்

நீர்கொழும்பு கடற்பகுதியில் பல மீன்பிடி படகுகள் விபத்து

August 1, 2026
மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!

August 1, 2026
17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!
செய்திகள்

17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!

August 1, 2026
Next Post
மட்டக்களப்பில் ஆக்டிவ் டெக் நெட்வொர்க் கேம்பஸின் முதலாவது வருடாந்த பட்டமளிப்பு விழா

மட்டக்களப்பில் ஆக்டிவ் டெக் நெட்வொர்க் கேம்பஸின் முதலாவது வருடாந்த பட்டமளிப்பு விழா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு