மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயான்குடா வயற்பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (28) மாலை ஏற்பட்ட இடிமின்னல் தாக்குதலில் குடும்பஸ்தரான கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் என்பவரே பலியானவரென கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர் .
காயன்குடா வயலில் வரம்பு கட்டிக் கொண்டிருந்த வேளை மழை பெய்யாத சமயம் திடீரென ஏற்பட்ட இடிமின்னலில் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
.
ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் கரடியனாறு பொலிஸாருடன் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டு முதற்கட்ட விசாரணையில் விசாரணைகளை முன்னெடுத்தார்.
கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.