Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தீபாவளியைக் கூட சந்தோஷமாகக் கொண்டாட முடியாதளவுக்கு பொருளாதாரச் சுமை காணப்படுகிறது; அநுர அரசை சாடும் வேலுகுமார்

தீபாவளியைக் கூட சந்தோஷமாகக் கொண்டாட முடியாதளவுக்கு பொருளாதாரச் சுமை காணப்படுகிறது; அநுர அரசை சாடும் வேலுகுமார்

2 years ago
in செய்திகள்

பொருளாதாரப் போரில் இருந்து மக்களை மீட்போம் என சிவப்புத் தோழர்கள் கொக்கரித்தார்கள். ஆனால், இன்று பொருட்களின் விலைகள் எகிறியுள்ளதோடு, தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகையான தீபாவளியைக் கூட சந்தோஷமாகக் கொண்டாட முடியாதளவுக்கு பொருளாதாரச் சுமை காணப்படுகின்றது என புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளர் எம்.வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

“ரணில் விக்ரமசிங்க ஆட்சியின் போது வழங்கப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு போதாது எனவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியினர் கூறிவந்தனர்.

எனவே, அஸ்வெசுமவைவிட அதிக கொடுப்பனவு வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால். அப்படி எதுவும் நடக்கவில்லை. மக்களின் வாழ்க்கைச் சுமையும் குறையவில்லை. மாறாக நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன.

இதனால் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை பெருந்தோட்டப் பகுதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆனால், பொருட்களின் விலைகளைப் பார்க்கும்போது, கொண்டாடுவதை விட்டுவிட்டு திண்டாட வேண்டிய நிலையே காணப்படுகின்றது.

அதேவேளை, கட்சி தேர்தல் அரசியலைவிட நாடுதான் முக்கியம் என்று தேசிய மக்கள் சக்தியினர் கூறி வந்தனர்.

ஆனால், பிரிக்ஸ் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தும் ஜனாதிபதி அநுரகுமார செல்லவில்லை. இதன்மூலம் எமக்கு இராஜதந்திர ரீதியில் கிடைக்கவிருந்த பல நன்மைகள் இல்லாமல் போயுள்ளன.

நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுவதால்தான் ஜனாதிபதி செல்லவில்லை என கூறப்படுகிறது. நாட்டைவிட தேர்தல்தான் முக்கியம் எனில் அவர்கள் கூறிய மாற்றம் அதுதானா?

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடும் நடைபெற்றது. அதிலும் ஜனாதிபதி பங்கேற்கவில்லை. அரச தலைவர்கள் மாநாட்டுக்கு அதிகாரிகளை அனுப்புவதன் மூலம் முழு நன்மையும் கிடைக்கப்பெறப் போவதில்லை.

இது தொடர்பில் சிவப்பு தோழர்கள் கூறப்போவது என்ன?” என்றும் வேலுகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
வேட்பாளர்களுக்கு விருந்துகளை நடத்த வசதிகளை வழங்கும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வேட்பாளர்களுக்கு விருந்துகளை நடத்த வசதிகளை வழங்கும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு