Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் மீது பிள்ளையானின் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல்!

கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் மீது பிள்ளையானின் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது பிள்ளையானின் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில், கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பாடசாலை வீதியில் ஜனநாயக முன்னணி கட்சியான கருணா அம்மானின் கட்சியின் வேட்பாளர் காரியாலயத்தின் முன்னால் உள்ள வீதியில் சம்பவதினமான நேற்று இரவு ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த 6 பேர் கொண்ட பிள்ளையானின் கட்சி ஆதரவாளர்கள் அங்குள்ள மதில்களில் கருணா அம்மானின் கட்சி வேட்பாளர்களது சுவரொட்டிகளுக்கு மேல் பிள்ளையானின் கட்சி சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த போது,கருணாவின் வேட்பாளர் சென்று எங்கள் சுவரொட்டிகளுக்கு மேல் சுவரொட்டிகளை ஒட்டவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

அந்த நிலையில் இரு கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே வாய்த்தர்கம் ஏற்பட்டதையடுத்து கருணாவின் வேட்பாளர்,அவரது ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .

இதனையடுத்து கருணாவின் கட்சி வேட்பாளர் முனிசாமி நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர் இருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்ததையடுத்து, பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனை தொடர்ந்து படுகாயாமடைந்தவர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் பின்னர் தாக்குதலை மேற்கொண்டவர்கள் பிள்ளையானின் ஆதரவாளர்கள் 4 பேர் என மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து அவர்களை இன்று(04) திங்கட்கிழமை காலையில் வைத்தியசாலையில் வைத்து கைது செய்தனர்;.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.