Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்கா பார்வையாளரா?- பங்காளரா? (கட்டுரை )

அமெரிக்கா பார்வையாளரா?- பங்காளரா? (கட்டுரை )

2 years ago
in அரசியல், செய்திகள்

தமிழர் பிரச்னையில் அமெரிக்கா பார்வையாளராக இருக்கக் கூடாதென்று சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். அண்மையில், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அமெரிக்கா தொடர்பில் தமிழ் சூழலில் அவ்வப்போது பேசப்படுவதுண்டு. அண்மையில், உலகத் தமிழர் பேரவையின் தலைமையில் புலம்பெயர் பிரதி நிதிகள் சிலர் வாஷிங்டனில் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜதந்திரிகளை சந்தித்திருந்தனர். அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் அழுத்தங்களை பிரயோகிக்குமென்று வாக்குறுதியளித்ததாக சந்திப்பில் பங்குகொண்டவர்கள் கூறியிருந்தனர்.

இதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினர் ஏம். ஏ. சுமந்திரன் தலைமையிலான மூவர் அடங்கிய குழு ஒன்றும் அமெரிக்கா சென்றிருந்தது. நாடு திரும்பிய சுமந்திரன் அமெரிக்கா கடுமையான சில நடவடிக்கைகளை
எடுக்கவுள்ளதாகக் கூறியிருந்தார். ஆனால், அவர் கூறியவாறு எதுவும்நடக்கவில்லை.

அமெரிக்கா இலங்கை விடயத்தில் பார்வையாளராகவும் இருக்கவில்லை பங்காளராகவும் இருக்கவில்லை. ஓர் உலக சக்தியென்னும் வகையில் அமெரிக்காவின் நீண்டகால நலன்களின் அடிப்படையில் அமெரிக்கா அதன் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. அண்மையில், அமெரிக்காவுக்கும் – இலங்கைக்குமான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு கொழும்பில் கொண்டாடப்பட்டது. ஒரு நட்புநாடு என்னும் வகையில் இலங்கையின் நலன்களில் அமெரிக்கா அதன் எல்லைக்கு உட்பட்டு ஈடுபாடு காட்டிவருகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி மற்றும்
இராணுவ தளபாட உதவிகளை அமெரிக்கா வழங்கி வந்திருக்கின்றது. உலகளாவிய பயங்கரவாதத்தை தடுப்பதென்னும் அடிப்படையிலேயே அமெரிக்காவின் உதவிகள் அமைந்திருந்தன. 1997ஆம் ஆண்டு அமெரிக்கா விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் பெரியளவில் நன்மை பெற்றது.

யுத்தம் முடிவுற்றதன் பின்னணியில் – விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போதான மனித உரிமைகள் மீறல், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான அழுத்தங்களை அமெரிக்கா பிரயோகித்து வருகின்றது. இந்த பின்புலத்தில்தான் 2012இல் இலங்கையின் மீதான முதலாவது பொறுப்புக் கூறல் பிரேரணை நிறை வேற்றப்பட்டது. அப்போதைய ஒபாமா நிர்வாகத்தின் முயற்சியாலேயே அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவின் அணுகுமுறையை நோக்கினால் ஒரு விடயத்தை காணலாம். அதாவது, அமெரிக்காவின் அணுகுமுறை இலங்கையை மையப்படுத்தியதே தவிர தமிழ் மக்களை பிரத்தியேகமாகக் கொண்ட தல்ல. இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், நல்லாட்சியை ஊக்குவித்தல் என்னும் அடிப்படையில்தான் அமெரிக்காவின் ஈடுபாடு அமைந்திருக்கின்றது. இந்த நிலையில், அமெரிக்கா தமிழர் பிரச்னையில்
பார்வையாளராக இருக்கக்கூடாது என்றால் – இந்தியா போன்று தமிழ் மக்களின் அரசியல் பிரச்னையில் அமெரிக்காவும் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும். தமிழர்களுக்காக பிரத்தியேகமாக அழுத்தங்களை
பிரயோகிக்க வேண்டும். ஆனால், உலகம் அதிகம் பிராந்தியமயப்பட்டு வரும் சூழலில் அவ்வாறான தலையீட்டுக்கான வாய்ப்பில்லை. சம்பந்தன் இந்த விடயங்களை அறிந்து பேசுகின்றாரா அல்லது விடயங்களை அறிய முடியாத கையறுநிலையில் பேசுகின்றாரா?பொதுவாக தமிழ் அரசியல் தரப்புகள் தங்களின் கற்பனைகளையே இராஜதந்திரமாக முன்வைப்பதுண்டு. அமரிக்கா தொடர்பில் தமிழ்
அரசியல்வாதிகள் முன்வைக்கும் கருத்துகளே இதற்கு சிறந்த உதாரணமாகும். அமெரிக்கா போன்ற உலக சக்திகள் நீண்டகால அடிப்படையில் தான் விடயங்களைக் கையாளும். ஒரு நாட்டின் எண்ணிக்கையில்
சிறுபான்மையான மக்கள் கூட்டத்தில் பலம்பொருந்திய சக்திகள் பந்தயம் கட்டாது.

பெரும்பான்மையை கையாளவே முடியாதவோர் இக்கட்டான சூழலில்தான் ஏனைய மக்கள் கூட்டங்கள்மீது அவர்கள் பார்வைபடும். அமெரிக்காவை பொறுத்தவரையில் அவ்வாறான சூழல் இதுவரையில் இலங்கைத் தீவில் ஏற்படவில்லை.

தொடர்புடையசெய்திகள்

கொழும்பிலுள்ள கால்வாய்கள் மற்றும் வடிகால்களை புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
செய்திகள்

கொழும்பிலுள்ள கால்வாய்கள் மற்றும் வடிகால்களை புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

May 20, 2025
வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு
செய்திகள்

வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

May 20, 2025
வைத்தியர் முகைதீன் கொலை;புளொட் நெடுமாறன் வழக்கிலிருந்து விடுவிப்பு – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

வைத்தியர் முகைதீன் கொலை;புளொட் நெடுமாறன் வழக்கிலிருந்து விடுவிப்பு – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

May 20, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் நடந்த சம்பவங்கள் தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்துகின்றனவா?
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் நடந்த சம்பவங்கள் தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்துகின்றனவா?

May 20, 2025
மட்டு காந்திபூங்காவில் வீதி அபிவிருத்தி தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கக்கோரி முன்னெடுக்கப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம்
செய்திகள்

மட்டு காந்திபூங்காவில் வீதி அபிவிருத்தி தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கக்கோரி முன்னெடுக்கப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம்

May 20, 2025
அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்கள் விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள்; ட்ரம்ப் எச்சரிக்கை
உலக செய்திகள்

அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்கள் விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள்; ட்ரம்ப் எச்சரிக்கை

May 20, 2025
Next Post
அக்கரைப்பற்று கடலில் தீப்பற்றி எரிந்த படகு!

திருக்கோவில் கடற்பரப்பில் எந்தக் கப்பலும் தீப்பற்றவில்லை; கடற்படை விளக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.