Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாருக்கு வாக்களிக்க போகின்றீர்கள்? ; துரைரெத்தினம் கேள்வி

யாருக்கு வாக்களிக்க போகின்றீர்கள்? ; துரைரெத்தினம் கேள்வி

2 years ago
in செய்திகள்

”மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊழல் மோசடி செய்த பல மோசடிக்கு சொந்தகாரர்களும் படுகொலை செய்தவர்களும் பல படுகொலைக்கு காரணமாக இருந்ததுடன் ஆலயங்களுக்குள்ளே குண்டுவைத்து மோசடியாக பெற்ற பணத்தை மக்களுக்கு செலவு செய்துவரும் மோசடிகாரர்களுக்கும் தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக வாக்குகளை பிரிக்க களமிறக்கப்பட்ட சுயேச்சைக்குழுக்களுக்கும் வாக்களிக்க போகின்றீர்களா? மக்களே சிந்தியுங்கள்” என சங்கு சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகாரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகமாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் மக்களுக்கு சேவை செய்யக் கூடிய நல்ல திறமையான நேர்மையான ஆரோக்கியமுள்ள ஊழல் மோசடி அற்ற பிரதிநிதியை தெரிவு செய்கின்றதற்காகவே இந்த தேர்தல் நடாத்தப்படுகின்றது

இந்த தேர்தலில் மாவட்டத்தில் திறமையானவர்களையும் நல்லவர்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களை தெரிவு செய்ய மக்கள் தயாராக இருக்கின்ற வேளையில் பல ஊழல் மோசடி செய்த பல படுகொலைகளை செய்தவர்கள் 14 ம் திகதி நடக்கப் போகும் தேர்தலில் அந்த மோசடி செய்த பணத்தை மக்களுக்கு செலவு செய்து வருகின்றனர்.

தமிழர்கள் உரிமை தொடர்பாக மாவட்டத்திலுள்ள தமிழ் அனைத்து குடும்பங்களும் ஏதோ ஒருவகையில் உயிரூட்டியது. உயிர் தியாகம் செய்ததுடன் பொருள்சேதம் மற்றும் பல இழப்புக்களை தமிழர்கள் சுதந்திரத்திற்காக ஒவ்வொரு தனிநபர்களும் சந்தித்தனர். இந்த நிலையில் இந்த மோசடிகாரர்கள் உங்கள் வாக்குகளை பெற்றுக் கொண்டு எவ்வளவு மோசடி செய்ய முடியுமோ அனைத்து மோசடிகளையும் செய்து குண்டுகளையும் வைத்து படுகொலைகளையும் செய்துள்ளனர்.

எனவே இப்படிப்பட்ட மோசடி செய்த வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்க போகின்றீர்களா? அல்லது தேர்தலில் மிகவும் திறமையான நேர்மையாக தமிழ் மக்களுக்கு சேவை செய்யக் கூடிய பிரதிநிதியை தெரிவு செய்வதற்காக கங்கனம் கட்டிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் குறுக்காளே புகுந்து வாக்குகளை பிரிப்பதற்காக ஈடுபடுகின்ற சுயேச்சைக்குழுக்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா?

இவ்வாறனவர்களுக்கு வாக்களிப்பதன் ஊடாக மாவட்டத்தில் பெறக்கூடிய 4 தமிழ் பிரதிநிதிகளை நாங்கள் இழப்போம் எனவே இழப்பதற்கு எந்தவொரு தமிழனும் சம்மந்தப்பட்டவராக இருந்து விடமாட்டார்கள் என நான் நம்புகின்றேன். அதனடிப்படையில் நான்கு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் என்ற சிறப்பான செய்திகளை 15ம் திகதி வழங்குவார்கள்.

அதேவேளை கடந்த காலத்தில் தேர்தலைகேட்டு பல மோசடிக்கு சொந்தகாரர்களாக இருக்கின்ற பிரதிநிதிகளுக்கு வாக்களிக்க போகின்றீர்களா? தமிழ் தேசியத்தை அழிப்பதற்காக உடந்தையாக இருந்தவர்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா? தமிழர்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா? அல்லது நல்ல செயற்திட்டங்களையும் தமிழ் தேசியத்தை பாதுகாக்க செயற்திட்டம் உள்ளவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க போகின்றீர்களா?

அல்லது தற்போது ஆட்சி பீடம் ஏறிய ஜேவிபி கட்சி தமிழ் மக்களுக்கு எதிரான 5 செயற்திட்டங்களை தீட்டியுள்ளனர் அதில் முள்ளிவாய்கால் படுகொலையை சர்வதேச ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளை விசாரிக்க முடியாது எனவும், கடந்த 2006 யூன் 30 ம் திகதி இணைந்திருந்த வடகிழக்கை இரண்டாக நீதிமன்றம் ஊடாக பிரித்ததுடன் வடக்கு கிழக்கை அழிப்பதற்காக இராணுவத்திற்கு படைபடையாக இளைஞர்களை சேர்த்து கொடுத்து தமிழ் மக்களை படுகொலை செய்ததுடன் கடந்த கால அமைச்சரவை தீர்மானித்த சம்பள அதிகரிப்பை விடையங்களை அமுல்படுத்தாமல் இருக்கின்றதுடன்

வடக்கு கிழக்கில் வெளிநாடுகள் முன்வைத்த அபிவிருத்தி திட்டங்களை வெளிநாடு தலையிடக்கூடாது என அதனை நிறுத்துவதற்கான முயற்சித்துவரும் இந்த அரசு இலங்கை அணிசேரா நாடுகள் என சொல்லிக் கொண்டு அம்பாந்தோட்டையையும் கொழும்பையும் சீனாவுக்கு விற்றுவிட்டு ஏனைய நாடுகளை வரக்கூடாது நாங்கள் அணிசேர நாடுகள் என சொல்லிக் கொண்டு இனவாதம் இல்லை என்று தெரிவித்துக் கொண்டு இனவாத செயலை செய்துவருகின்ற இந்த கட்சிக்கு வாக்களிக்க போகின்றீர்களா? என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
களுவாஞ்சிக்குடியில் சாணக்கியனின் பிரச்சாரக்கூட்டத்தை தடுத்து நிறுத்திய தேர்தல் ஆணைக்குழு

களுவாஞ்சிக்குடியில் சாணக்கியனின் பிரச்சாரக்கூட்டத்தை தடுத்து நிறுத்திய தேர்தல் ஆணைக்குழு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.